Published : 01 Apr 2022 07:32 AM
Last Updated : 01 Apr 2022 07:32 AM
புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன.
ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன.
இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள 4 திரைப்பட அமைப்புகளை மத்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு மாற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் திரைப்படம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முடியும் என்றும் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளின் பணிகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்கு அமைப்புகளை என்எப்டிசி-யின் கீழ் கொண்டு வருவதால் பொது வளங்களை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இணைக்கப்படும் அமைப்பு களின் சொத்துகள் அரசின் வசமேஇருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT