Published : 28 Mar 2022 07:58 AM
Last Updated : 28 Mar 2022 07:58 AM

எஸ்எஸ்எல்சி தேர்வு தொடக்கம் - ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை: கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர மாநில அரசு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உறுதி அவர் மேலும் கூறியதாவது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நாளை (இன்று) தொடங்கவுள்ளன. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத வருபவர் களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

பி.சி. நாகேஷ்எனவே, ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தால், சம்பந்தப்பட்ட மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹிஜாப் விவகாரத்தில் எஸ்எஸ்எல்சி உள்ளிட்ட பொதுத் தேர்வை எழுதாமல் தேர்வை புறக்கணிப்போருக்கு மறுதேர்வும் நடத்தப்படாது சில பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வருவது சீருடையாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தாலும் தேர்வு நேரங் களில் ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது. தேர்வு எழுத வரும்போது ஹிஜாபை எடுத்து விட்டுத்தான் உள்ளே வரவேண்டும். இதற்கான அறிவிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளோம்.

இந்த உத்தரவு தனித்தேர்வர் களுக்கும், மதிப்பெண்ணை அதிகரிக்க மறுதேர்வு எழுதுபவர்களுக்கும் பொருந்தும். மாநிலத்தில் 84 ஆயிரம் முஸ்லிம் மாணவிகள் உள்ள நிலையில் 500 முதல் 600 முஸ்லிம் மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச் சினையை எழுப்பியுள்ளனர். பெரும்பாலான மாணவிகள் அரசு உத்தரவை மதிக்கின்றனர். ஒருசிலர் மட்டுமே எதிர்க்கின்றனர். நாம் நேர்மறையான சிந்தனை உள்ள பக்கத்தை நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x