Published : 23 Mar 2022 07:12 AM
Last Updated : 23 Mar 2022 07:12 AM

இலங்கை தமிழர்களுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22-ம் நிதியாண்டில் ரூ.80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்நாட்டு போரின்போது ஏராளமான தமிழர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக முகாம்களில் வாழும்இலங்கை தமிழர்கள் தொடர்பாகமக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துபூர்வ மாக நேற்று பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக நிதி யுதவி, மானிய விலையில் அரிசி, இலவச உடைகள், பாத்திரங்கள், ஈமச்சடங்கு உதவி, அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. 2021-22-ம் நிதியாண்டில் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.78 கோடி ஏற் கெனவே தமிழக அரசுக்கு வழங் கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x