Published : 22 Mar 2022 06:46 AM
Last Updated : 22 Mar 2022 06:46 AM
உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் முழங்காலிட்டு விழுந்து வணங்கினார். அப்போது பிரதமரும் சிரம் தாழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
விருது பெறுவதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் முன்பும் சிவானந்தா சிரம் தாழ்ந்து வணங்கினார். அவரை குடியரசுத் தலைவர் கைதூக்கிவிட்டார். 126 வயதிலும் நடந்து வந்த சுவாமி சிவானந்தாவின் உடல் வலிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அவர் விருது பெற்றபோது அனைவரும் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT