Published : 17 Mar 2022 07:29 AM
Last Updated : 17 Mar 2022 07:29 AM
அமராவதி: ஆந்திர அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் மீண்டும் 25 சதவீத மானியக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர போக்கு வரத்து துறை அமைச்சர் பி. வெங்கடராமய்யா நேற்று அமராவதியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவுவதற்கு முன், நம் மாநிலத்தில் 60 வயது நிரம்பியவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டது. ஆனால் கரோனா காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்த சலுகையை தற்போது மீண்டும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையை காண்பித்து இந்த சலுகையை மூத்த குடிமக்கள் பெறலாம்.
போக்குவரத்து கழகத்திலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். அரசுப் பேருந்துகளுக்கு தினமும் 8 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. முன்பு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டீசல் நேரடியாகப் பெறப்பட்டது. தற்போது எண் ணெய் நிறுவனங்களை விட வெளி பங்க்குகளில் டீசல் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு தினமும் ரூ. 1.50 கோடி மிச்சமாகிறது. விரைவில் திருப்பதி-திருமலை, திருப்பதி-மதனபள்ளி, திருப்பதி நெல்லூர் ஆகிய தடங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT