Published : 11 Mar 2022 07:19 AM
Last Updated : 11 Mar 2022 07:19 AM
லக்னோ: உத்தர பிரதேச தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முயற்சிகள் 3-வது முறையும் தோல்வி அடைந்துள்ளது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து உ.பி. முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ் வாதி கட்சி தோல்வி அடைந்தது. பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.
தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய அகிலேஷ் சிங், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். உ.பி. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்தது அந்தத் தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக.வுக்கு எதிராக 2 முரண்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எனி னும், இந்தக் கூட்டணி தோல்வி அடைந்தது. பெரும்பாலான மக் களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
இந்த 2 கூட்டணி பரிசோதனை முயற்சியின் தோல்விகளையடுத்து, இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் அகிலேஷ் புதிய வியூகம் வகுத்தார். ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம், ஷிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாதி, அப்னா தளம் (கமேராவாதி) மற்றும் மஹான் தளம் கட்சி ஆகிய 5 சிறிய கட்சிகளுடன் அகிலேஷ் சிங் யாதவ் கூட்டணி அமைத்தார். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 345 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதியுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு அகிலேஷ் பகிர்ந்து கொடுத்தார்.
இந்தக் கட்சிகள் ஜாட் சமூகத் தினர் மற்றும் ஆங்காங்கே வட் டார அளவில் செல்வாக்கு கொண் டவை. எனவே, இவற்றுடன் கூட்டணி அமைப்பது பரவலாக தங்கள் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுத் தரும் என்று அகிலேஷ் கணக்கிட்டார். எனினும், தேர்தலில் அகிலேஷின் கூட்டணி முயற்சி 3-வது முறையும் தோல்வியில் முடிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT