Published : 10 Mar 2022 11:47 AM
Last Updated : 10 Mar 2022 11:47 AM
சண்டிகர்: பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 21906 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.
சன்னி, சித்து, அம்ரீந்தர் சிங் தோல்வி முகம்
ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் ஜீவன் ஜோத் கவுரை விட நவ்ஜோத் சிங் சித்து 1,505 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பாட்டியாலாவில் பின்தங்கியுள்ளார்
கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் அவர் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் பாட்டியாலா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோஹ்லியை விட 9,592 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளனர்.
பகவந்த் மான் அபார முன்னிலை
ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் 21906 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை எதிர்த்து ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் போட்டியிட்டார். 21,906 வாக்குகள் வித்தியாசத்தில் துரியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT