Published : 08 Mar 2022 06:42 AM
Last Updated : 08 Mar 2022 06:42 AM

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவருக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் நேரில் ஆறுதல்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்துவந்தனர். இதனிடையே உக்ரைன்மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள மாணவர்களை ஆபரேஷன் கங்கா மூலம் இந்திய அரசு மீட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் குண்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் போலந்து எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது காயமடைந்த மாணவர் ஹர்ஜோத் சிங்கை, போலந்தின் ருசெஸ்ஸோ விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக `கூ'சமூக வலைத்தளத்தில் கூறும்போது, "மாணவர் ஹர்ஜோத் சிங் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்று நான் உறுதியளிக்கிறேன். அவருக்கு ஏற்பட்டது மோசமான நிகழ்வு. அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். விரைவில் அவர் டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ஹர்ஜோத் சிங் இந்திய விமானப் படை விமானத்தில் நேற்று மாலை டெல்லிஅழைத்து வரப்பட்டார்.

பின்னர் சிகிச்சைக்காக ராணுவமருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x