Published : 07 Mar 2022 08:21 PM
Last Updated : 07 Mar 2022 08:21 PM

Exit Poll Results 2022 | உ.பி-யில் மீண்டும் பாஜகவின் யோகி ஆட்சி - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவே உற்றுநோக்கும் உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்துள்ள நிலையில், இதன் கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜகவே மீண்டும் ஆட்சிபுரியும் என்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 7-வது கட்டத் தேர்தல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக கூட்டணி - 211 - 225 தொகுதிகள்

சமாஜ்வாதி கூட்டணி - 146 - 160 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 14 - 24 தொகுதிகள்

காங்கிரஸ் - 4 - 6 தொகுதிகள்

ரிபப்ளிக் டிவி - பி-மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள்

பாஜக - 240 தொகுதிகள்

சமாஜ்வாதி - 140 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 17 தொகுதிகள்

காங்கிரஸ் - 4 தொகுதிகள்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக - 225 தொகுதிகள்

சமாஜ்வாதி - 151 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 14 தொகுதிகள்

காங்கிரஸ் - 9 தொகுதிகள்

பிற கட்சிகள் - 4 தொகுதிகள்

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக - 222-260 தொகுதிகள்

சமாஜ்வாதி - 135-165 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 4-9 தொகுதிகள்

காங்கிரஸ் - 1-3 தொகுதிகள்

பிற கட்சிகள் - 3 - 4 தொகுதிகள்

மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக - 262-277 தொகுதிகள்

சமாஜ்வாதி - 119-134 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 7-15 தொகுதிகள்

காங்கிரஸ் - 3-8 தொகுதிகள்

Polstrat கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக - 211-225 தொகுதிகள்

சமாஜ்வாதி - 146-160 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் - 14-24 தொகுதிகள்

காங்கிரஸ் - 4-6 தொகுதிகள்

வாசிக்க > ஆம் ஆத்மி வசமாகும் பஞ்சாப்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x