Published : 03 Mar 2022 06:52 AM
Last Updated : 03 Mar 2022 06:52 AM
அமராவதி: உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ஆந்திர மாணவ, மாணவியரில் சிலர் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் 680 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவர்களுக்கு உதவிகரமாக இருக்க ஆந்திர அரசு அதிகாரிகள் குழுவும் உக்ரைன் எல்லை வரைசெல்லலாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஒப்புதல் அளித் துள்ளார்.
அதன்பேரில் சுமார் 10 பேர்கொண்ட குழு உக்ரைன் எல்லைக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்துஉக்ரைன் செல்லும் விமானங்களில் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்ல உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT