Published : 29 Apr 2016 05:25 PM
Last Updated : 29 Apr 2016 05:25 PM
மும்பையில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தினால் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட 31 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைச் செயல்படுத்த 12 வாரங்கள் அவகாசம் கேட்டது ஆதர்ஷ் கூட்டுறவு, இதனை உயர் நீதிமன்றம் ஏற்று கால அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் பதவி விலகினார்.
இந்நிலையில் ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க உத்தரவு பிறப்பித்த மும்பை உயர் நீதிமன்றம், இதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT