Published : 23 Feb 2022 08:46 AM
Last Updated : 23 Feb 2022 08:46 AM

2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரில் 68% பலாத்கார குற்றவாளிகள்

புதுடெல்லி: கடந்த 2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களில் 68% பேர் பலாத்கார குற்றவாளிகள் ஆவர்.

கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சுமார் 90 ஆயிரம் பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளதாக சிறைத் துறை புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. இதில் 14.2 சதவீதம் பேர் பலாத்கார குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்ற18,615 பேரில் 67.9% பேர் (12,631) பலாத்கார குற்றவாளிகள் ஆவர். வரதட்சணை தொடர்பான கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் 24.5% பேர்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப் பட்டோரில் 4,760 பேருடன் உ.பி. முதலிடத்திலும் 2,944 பேருடன் ம.பி. 2-ம் இடத்திலும் 1,196 பேருடன் ஜார்க்கண்ட் 3-ம் இடத்திலும் உள்ளன.

கடந்த 2020 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு 64,520 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளனர். இதில் 62.8% பேர் (40,545) பலாத்கார வழக்குகளிலும் 22.4% பேர் (14,465) வரதட்சணை தொடர்பான கொலை வழக்குகளிலும் தொடர் புடையவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x