Published : 18 Feb 2022 10:05 AM
Last Updated : 18 Feb 2022 10:05 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா மாநிலத்தில் 100% மக்களுக்கும் இரு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.07 % என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 2.76%. .
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,27,80,235.
* கடந்த 24 மணி நேரத்தில் 66,254 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,19,77,238.
* கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,10,905.
* இதுவரை நாடு முழுவதும் 174.6 (1,74,64,99,461) கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கோவாவில் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை: கோவா மாநிலத்தில் தகுதி உள்ள 11.66 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அம்மாநில சுகாதார சேவைகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
100% தடுப்பூசி இலக்கை அடைந்துவிட்டதால், மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம் அதன் அனைத்து தடுப்பூசி மையங்களையும் மூடிவிட்டு, அவற்றை சாதாரண நோய்த்தடுப்பு திட்டத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT