Published : 15 Feb 2022 05:41 PM
Last Updated : 15 Feb 2022 05:41 PM
ஹைதராபாத்: ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா கூறினார்.
மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் மம்தா திட்டமிட்டு வருகிறார். ஆனால், இந்த அணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்று அவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை மற்ற எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தேன். அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
எந்தவொரு மாநிலக் கட்சியுடனும் காங்கிரஸ் இணக்கமாக இல்லை. அக்கட்சி தனக்கான பாதையில் தனித்து செயல்படுவதால், எங்களுக்கான பாதையில் நாங்கள் செல்கிறோம்.
நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து மாநில கட்சிகளும் இதில் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவருமான எச்.டி.தேவேகவுடா இன்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.
அப்போது ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’’ என தேவகவுடா கூறியதாவக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 22 Comments )
‘‘நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’- மம்தா அணியில் இணையும் தேவகவுடா - பெரிய அக்கப்போராக இருக்கிறதே. பூஜ்ஜியத்துடன் மேலும் ஒரு பூஜ்ஜியம் இணைவதால் அதன் மதிப்பு கூடிவிடுமா என்ன?
5
6
Reply
அவர் ஒருகாலத்தில் பிரதமர் நண்பரே. வாஜ்பாயியால் வெறும் 16 நாட்களை தாண்ட முடியாத நிலையில், இவர் பிரதமராகி கிட்டத்தட்ட 11 மாதங்கள் பதவி வகித்தவர் அவர்.
2
3
இதில் கூட்டணி சேரும் கட்சிகளை பாருங்கள் அவர்கள் ஆளும், ஆண்ட மாநிலங்களில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு தண்ணீர் தரக்கூட மறுப்பவர்கள், அடுத்து உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாட்டுகென பொது சட்டங்கள் உள்ளன ஆனால் இந்நாட்டில் பொதுச் சட்டம் என்று ஒன்று வரவே கூடாது என்ற எண்ணமுடைய கட்சிகளே ஒன்று சேர்ந்துள்ளன இவர்களால் பிரிவினை சக்திகளின் கை ஓங்கும் என்பதை தவிற வேறெதுவும் நடக்க போவதில்லை
8
10
Reply
திரு எஸ் ஜெயராம் : அவர்களே உங்களது முதல் வாக்கியம் -..........தண்ணீர் தர மறுப்பவர்கள் - எந்தெந்த கட்சிகளை நினைத்து பதிவிட்டீர்கள் என தெரியவில்லை - இந்தியாவில் இருக்கும் தண்ணீர் பங்கீடு தகராறு உள்ள மாநிலங்கள் : KRISHNA WATER DISPUTES : ஆந்திரப்பிரதேசம் தெலுங்கானா மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா. - MAHANADHI WATER DISPUTES : சட்டிஸ்கர் மற்றும் ஒடிஸ்ஸா . MAHADAYI WATER DISPUTES : GOA , மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா - RAVI AND BEAS WATER TRIBUNAL : ராஜஸ்தான் ஹரியானா மற்றும் பஞ்சாப - VANSADHARA WATER DISPUTES : ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம் - CAUVERY WATER DISPUTES : கர்நாடகா , தமிழ்நாடு, கேரளம் மற்றும் பாண்டிச்சேரி - NARMADA WATER DISPUTES : மஹாராஷ்டிரா ராஜஸ்தான் மத்தியபிரதேசம் மட்டும் குஜராத் - இதில் நீங்கள் கூறிய "கூட்டணி சேரும் கட்சிகளை பாருங்கள்" - என்ற வாதம் அனைத்தும் அடிபட்டு போய்விட்டதே - இந்தியாவிலும் பல பொது சட்டங்கள் உள்ளன - ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது அனைத்தையும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் - தேவையற்ற பொதுச்சட்டங்கள் தான் எதிர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றன - தண்ணீருக்காக பொது சட்டம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே - மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ள பட்டிருக்கும் - அதை செய்ய வில்லை என்பதால் தற்போதைய மத்திய அரசு முன்னெடுத்திருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும் -
4
2
பாஜகவையும் சேர்த்துத்தானே?
5
9