Published : 13 Feb 2022 07:30 PM
Last Updated : 13 Feb 2022 07:30 PM

தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ரூ.18,839 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட முன்முயற்சியை இந்த ஒப்புதல் முன்னெடுத்துச் செல்லும்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் படை இயக்கத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ,மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மத்திய அரசு ரூ.26,275 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றுதல், போதை மருந்து கடத்தலைத் தடுத்தல், வலுவான தடயவியல் நடைமுறைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.

மாநில காவல் படைகளை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.4,846 கோடி ஒதுக்கியுள்ளது.

உயர்தரமான தடய அறிவியல் வசதிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படுத்த ரூ.2,080.50 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான செலவுகள், வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதப் பாதிப்பு மற்றும் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புக்காக மத்திய அரசு ரூ.18,839 கோடி ஒதுக்கியுள்ளது.

இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில், தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை செயல்படுத்த ரூ.8,689 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x