Published : 13 Feb 2022 11:13 AM
Last Updated : 13 Feb 2022 11:13 AM
புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 44,877 என்றளவில் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது.
நாடுமுழுவதும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலும் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,877 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
* சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.17% என்றளவில் உள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 42,631,421.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,17,591 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,15,85,711.
* கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 97.55 சதவீதமாக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,08,665.
* இதுவரை நாடு முழுவதும் 1.72 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் 49,16,801 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* இவர்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3,32,764 ஆக உள்ளது.
* 15-18 வயது கொண்டவர்களில் பேருக்கு 16,65,792 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT