Published : 13 Feb 2022 09:35 AM
Last Updated : 13 Feb 2022 09:35 AM

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக புர்கா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய கல்லூரி நிர்வாகம்

போபால்

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவியிடம், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியது.

மத்தியபிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் சாத்னா பகுதியில் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் எம்.காம் படிக்கும் மாணவி ருக்சானா கான் என்பவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு புர்காவும், ஹிஜாபும் அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அவரைக் கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவரை மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுள்ளது. இதையடுத்து ருக்சானாவும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல் வர் (பொறுப்பு) எஸ்.பி.சிங் கூறிய தாவது:

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுநாள் வரையில் புர்கா, ஹிஜாப் அணிந்து வராத ருக்சானா நேற்று முதல் முறையாக புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்தார்.

தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கவும், மாண வர்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவரிடம் மன்னிப்புக் கடிதம் கேட்டோம். வழக்கமாக சீருடை யில் வரும் ருக்சானா நேற்று புர்கா அணிந்து வந்தார். இதனால் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இருப்பினும் நாங்கள் நிலை மையைக் கட்டுக்குள் கொண்டு வந்து அவரிடம் மன்னிப்புக் கடிதம் பெற்றோம். இவ்வாறு எஸ்.பி.சிங் கூறினார்.

இதுசம்பந்தமான வீடியோ நேற்று முன்தினம் மாலை சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து கல்லூரி மாணவர் அஜய் திவிவேதி கூறும்போது, "இந்த சமயத்தில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாணவி ருக்சானா செயல்பட்டுள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டோம். இல்லாவிட்டால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று எச்சரித்தோம். இதையடுத்து அவரிடம் கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கடிதம் பெற்றது" என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

இந்த சம்பவத்தில் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x