Published : 01 Apr 2016 09:47 AM
Last Updated : 01 Apr 2016 09:47 AM

திருப்பதியில் பக்தர்களின் நெரிசலை சமாளிக்க கோடை விடுமுறையில் 20% கூடுதல் பஸ் போக்குவரத்து

திருப்பதியில் கோடை விடுமுறை யில் பக்தர்களின் நெரிசலை சமா ளிக்க பஸ் போக்குவரத்து 20% அதிகரிக்கப்படவுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து பொது மேலாளர் சேஷா ரெட்டி தெரிவித்தார்.

கோடை விடுமுறை நெருங்குவதையொட்டி, திரு மலை-திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்காக பல்வேறு வசதி களை ஏற்பாடு செய்து வருகிறது. இதில் குறிப்பாக திருப்பதி-திருமலை இடையே பக்தர்கள் சென்று வர போதிய போக்கு வரத்து ஏற்பாடு குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானத்தில் கடந்த 10 ஆண்டு களாக போக்குவரத்து பொது மேலா ளராக பணியாற்றும் சேஷாரெட்டி ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திருமலை-திருப்பதி தேவஸ் தானத்தில் கார், ஜீப், லாரி, ஆம்பு லன்ஸ், இலவச பஸ் என மொத்தம் 325 வாகனங்கள் உள்ளன. இதில் ‘தர்ம ரதம்’ எனும் பஸ், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வாரி மெட்டு, மற்றும் அலிபிரி மலை அடிவாரப் பகுதிகளுக்கிடையே இயக்கப்படுகிறது. இதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதேபோன்று திருமலையில் 12 ‘தர்ம ரதங்கள்’ இயக்கப்பட்டு வருகின்றன. இவை 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 65 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். கோடை விடுமுறையில் மேலும் 2 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் விபத்து நடந்தாலோ அல்லது பழுதடைந்த வாகனங்களை திருப்பதிக்கு கொண்டுவர தற்போது ஒரு கிரேன் மற்றும் ஒரு ஆட்டோ கிளீனிக் வாகனம் இயக்கப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு மேலும் 2 வாகனங்கள் இயக்கப்படும். ஆந்திர அரசு பஸ் சேவைகளையும் இந்த கோடை விடுமுறையில் அதிகரிக்க தேவஸ்தான தலைமை அதிகாரி சாம்பசிவ ராவ்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதன்படி ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை கூடுதலாக 20 சதவீத பஸ்கள் இயக்கப்படும். இரவு வேளைகளில் 24 மணி நேரமும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x