Published : 09 Feb 2022 06:29 AM
Last Updated : 09 Feb 2022 06:29 AM
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது.
நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது.
லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்கும் செயல்களுக்கு ஹவாலா வழியில் அவர் பணம் செலுத்துவதாகவும் அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரது டி-கம்பெனியை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதில் இந்தியாவில்கலவரம் போன்ற சூழ்நிலையைஉருவாக்க நாடு முழுவதும் அவர்கள் ஆட்களை நியமித்துள்ளதை கண்டறிந்துள்ளன.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ் வழக்கு தொடர்பான விவரத்தை என்ஐஏ வெளியிடவில்லை. என்றாலும் இந்த வழக்கு டி-கம்பெனியின் தலைமை மற்றும் அதன் கையாட்களின் இந்திய விரோத செயல்பாடுகள் தொடர்பானது என கூறப்படுகிறது. இவர்களில் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தீவிரவாத செயல்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி-கம்பெனி ஆட்களின் ஒட்டுமொத்த குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களை என்ஐஏ ஆராய உள்ளதாக கூறப்படுகிறது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT