Published : 08 Apr 2016 09:44 AM
Last Updated : 08 Apr 2016 09:44 AM
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று மதியம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
சித்தூர் மாவட்ட நீதிமன்றம் நேற்று காலையில் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந் தது. நீதிமன்ற வளாகத்தில், வழக் கறிஞர்கள், போலீஸார், பொது மக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
இந்நிலையில், வாகன நிறுத்து மிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு காருக்கு அருகே மதியம் 12.15 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் நீதிமன்ற குமாஸ்தா பாலாஜி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த போலீஸார் இவர்களை சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். இதில் பாலாஜியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவர் துறை எஸ்.பி. நிவாஸ் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது வெடிக்காத மற்றொரு வெடி குண்டை கண்டுபிடித்த நிபுணர் குழுவினர் அதைச் செயலிழக்க செய்தனர். இந்த சம்பவத்தில் கார் மற்றும் 3 பைக்குள் சேதமடைந்தன.
சித்தூர் மேயர் தம்பதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிண்டு என்கிற சந்திரசேகர் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு விசா ரணைக்காக போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை முடிந்ததும் 12 மணிக்கு சிண்டுவை கடப்பா சிறைக்கு வேனில் அழைத்துச் சென்றனர். இதன்பிறகுதான் அங்கு குண்டு வெடித்தது. இதனால் சிண்டுவை கொலை செய்ய யாராவது சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT