Last Updated : 04 Feb, 2022 11:33 AM

 

Published : 04 Feb 2022 11:33 AM
Last Updated : 04 Feb 2022 11:33 AM

இந்தியாவில் மொத்த கரோனா உயிரிழப்பு 5 லட்சத்தைக் கடந்தது: பாசிடிவிட்டி 9.2% ஆக சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் மொத்த கரோனா உயிரிழப்பு 5 லட்சத்தைக் (5,00,055) கடந்தது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் பாசிடிவிட்டி 9.2% ஆகக் குறைந்தது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,49,394.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,19,52,712.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,46,764.

இதுவரை குணமடைந்தோர்: 4,00,17,088.

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 15,33,921.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 9.2% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,072

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 5,00,055.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 168.47 கோடி.

இதற்கிடையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் 3 ஆம் தேதி இவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கிய நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி 65% குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x