Last Updated : 04 Feb, 2022 07:53 AM

 

Published : 04 Feb 2022 07:53 AM
Last Updated : 04 Feb 2022 07:53 AM

ராகுல், பிரியங்கா போட்டி: முதல்வர் ஆதித்யநாத் கருத்து

இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், ‘‘ராகுல், பிரியங்கா ஆகிய இருவரில் யார் என்பது அவர்களது கட்சி விவகாரம். இதில், காங்கிரஸ் தேசியத் தலைவராக அமர்வது யார் என்றும் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இப்பிரச்சினையில் ஒருவரை விட மற்றொருவரை உயர்த்தி காண்பிக்கும் முயற்சி நடக்கிறது. இதற்காக மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்க்கவும் தயங்குவதில்லை. ராகுலின் பேச்சுக்களை காங்கிர ஸாரே பொருட்படுத்துவதில்லை’’ என்றார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என ஓங்கி ஒலித்தக் குரல்கள் தற்போது அடங்கத் தொடங்கிவிட்டன. ராகுல் தலைவரானாலும், ஆகாவிட்டாலும் காங்கிரஸை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காலி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதை தடுத்து கட்சியை காப்பாற்ற பிரியங்காவால் மட்டுமே முடியும். இது, லக்கிம்பூர்கேரி உள்ளிட்ட உ.பி. விவகாரங்களில் பிரியங்கா நடத்திய தீவிரப் போராட்டங்களில் தெளிவாகி விட்டது’’ எனத் தெரிவித்தனர்.

மன்னர் போல் செயல்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி : மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா ஒரு யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. இதன் படி, தமிழகத்திலுள்ள என் சகோதரர் களுக்கு உள்ள அதே உரிமை மற்ற மாநிலங்களில் உள்ள எனது சகோதரிக்கும் இருக்கும்.

யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்பது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுசுளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளும், உரை யாடல்களும் ஆகும். இதன்படி, தமிழகத்திலுள்ள எனது சகோதரி யிடம் சென்று நான் தங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, இதுதான் வேண்டும் என அவர் கூறுவார். அதேபோல் அவர், என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனத் திருப்பிக் கேட்க நான், இது தான் எனக்கு வேண்டும் எனக் கூறுவேன். இதற்கு பெயர் கூட்டு தவிர ராஜாங்கம் அல்ல.

இதை நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது உங்கள் ஆளுமையை செலுத்த முடியாது. இந்தியாவை ஆண்ட அசோகர், மவுரியர், குப்தர் என எந்த ஒரு ஆளுகை யும் உரையாடல் மற்றும் பேச்சு வார்த்தைகளின் மூலமாகவே சாத்தியமாகி இருக்கும்.

மொழிகள், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அறியாமல் நீங்கள் தமிழக மக்களை ஒடுக்கலாம் என எண்ணுகிறீர்கள். உங்களுக்கு என்ன செய்கிறோம் என்ற சிந்தனையே இல்லை. ஏனெனில், தமிழக மக்கள் தம் மனதில் நல் இதயம் கொண்டவர்கள். தமிழ் நாடு, தமிழ் மொழி என்பதும் இந்தியாவின் சிந்தனையே. கேரள மக்களுக்கும் ஒரு கலாச் சாரம் உண்டு. நான் அங்கிருந்து மக்களவைக்கு தேர்வானவன் என்பதால் அதை உணர்கிறேன். மத்திய அரசு ஆளும் கூட்டாச்சியில் தனி ஒரு பார்வை கொண்டுள்ளது. பிரம்பை கொண்டு மாநிலங்களை ஆள வேண்டும் என மத்திய அரசு எண்ணுகிறது. ஆனால், அதற்கான முயற்சியை நீங்கள் செய்யும் போது அந்த பிரம்பு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

தேசத்தின் மீதான உங்கள் தவறான பார்வையால், இருவேறு இந்தியா உருவாக்கப்பட்டிருக்கி றது. ஒரு பார்வையில் மாநிலங் களின் யூனியன், மொழிகளின் யூனியன், கலாச்சாரங்களின் யூனியன் என இந்த பன்முகப் பூங்கொத்திடம் உலகின் எந்த ஒரு சக்தியாலும் சவால் விட முடியவில்லை. மற்றொரு பார்வை, ஒரு மன்னரின் பார்வை. இந்த பார்வையைக் காங்கிரஸ் 1947-ல்அகற்றியது. அந்த மன்னரின்சிந்தனையை நாம் உடைத்தெறிந்தோம். ஆனால், இப்போது மாமன்னரின் பார்வை மீண்டும் வீசத் துவங்கி விட்டது.

உதாரணமாக, தமிழ்நாட்டின் சிந்தனையே இந்திய அமைப்பின் முறையிலிருந்து விலக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொரு முறையும் ’நீட் வேண்டாம்’ எனத் திரும்பத் திரும்ப கூறினார்கள். இதற்கு பதிலாக நீங்கள் ’எதுவும் கிடையாது என வெளியே போ’ என விரட்டியுள்ளீர்கள். உங்கள் கட்டமைப்பில் அவர்கள் குரலுக்கு மதிப்பில்லை. பஞ்சாப் விவசாயிகள் உங்கள் சட்டங்களை எதிர்த்து நின்றனர். இவர்களது குரலுக்கும் நீங்கள் மதிப்பளிக்கவில்லை. இங்கே மன்னருக்கு மட்டுமே குரல் உண்டு. விவசாயிகளை, கரோனா பாதிப்புகளால் உயிரிழக்க விட்டு ஓராண்டிற்கு வெளியில் விட்டீர்கள். ஆனால், மன்னர் அதை கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறு ராகுல் பேசினார்.

இந்த பேச்சிற்கு மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப கேட்டு சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் அவர், ராஜாங்கம் நடத்துவதாகத் தவறாக குற்றம் சுமத்தி மக்களை ராகுல் தூண்டியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x