Published : 06 Apr 2016 12:50 PM
Last Updated : 06 Apr 2016 12:50 PM

திமுகவும் அதிமுகவும் தேர்தல் நடைமுறைகளிலும் ஊழலைப் புகுத்தின: அமித் ஷா கடும் விமர்சனம்

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் தேர்தல் நடைமுறைகளிலும் ஊழலைப் புகுத்திவிட்டதாக அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அமித்ஷா அளித்த சிறப்புப் பேட்டியில், "5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பாஜக பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவிடம் பாஜக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்ற விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. நான் தமிழகம் செல்லும்போதெல்லாம் தமிழக அரசின் ஊழல்களை விமர்சித்திருக்கிறேன். தமிழக அரசு ஊழலற்றது என யாரும் சொல்ல மாட்டார்கள்.

தமிழகத்தின் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேர்தல் நடைமுறைகளிலும்கூட ஊழலை புகுத்திவிட்டனர். அதனை முறியடிப்பதே தமிழக பாஜகவின் முதல் பணியாக இருக்கிறது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜகவின் ஆதிக்கம் என்ற காலம் மாறிவிட்டது. எனவே, இந்த முறை கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக குறிப்பிடத்தக்க இடத்தை பெற கட்சித் தொண்டர்கள் அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா எளிதில் அணுகமுடியாதவராக இருக்கிறார். தமிழக அரசு மின்சாரம் திருடுபவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஜவடேகர் ஆகியோர் முன்வைத்து வரும் நிலையில் தற்போது அமித் ஷாவும் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x