Published : 27 Apr 2016 09:47 AM
Last Updated : 27 Apr 2016 09:47 AM
நாடு முழுவதும் உள்ள 108 வைணவ தலங்களிலும் ராமானுஜ ரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய் துள்ளது.
திருமலை அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழுத் தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவை வெகு விம ரிசையாக கொண்டாட முடிவு செய் துள்ளோம். அதன்படி வரும் மே 10-ம் தேதி திருப்பதியில் ரத உற்சவம் தொடங்கப்படும். இந்த ரதம் நாடு முழுவதும் உள்ள 108 வைணவ தலங்களுக்கும் செல்லும்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரூ.18 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்படும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் ரூ. 6.7 கோடி செலவில் அன்னதான கட்டிடம் அமைக்கப்படும்.
மேலும், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களுக்காக ரூ. 66.42 கோடி செலவில் 20 லட்சம் கிலோ நெய் வாங்கப்படும். காணிக்கையாக கிடைத்த தலைமுடியை ஏலம் விட்டதில் கடந்த பிப்ரவரியில் ரூ. 4.57 கோடியும், மார்ச்சில் ரூ. 23.19 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT