Published : 01 Feb 2022 12:38 PM
Last Updated : 01 Feb 2022 12:38 PM

மத்திய பட்ஜெட் 2021: 100% கோர் பேங்கிங் முறையின் கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள்

புது டெல்லி: நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் 100 சதவீதம் கோர் பேங்கிங் முறையின் கீழ் கொண்டுவரப்படும். இதன்மூலம் எங்கிருந்தும் அஞ்சலக கணக்குகளை இயக்கிக் கொள்ளலாம் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
> நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் 100% கோர் பேங்கிங் முறையின் கீழ் கொண்டுவரப்படும். இதன் மூலம் எங்கிருந்தும் அஞ்சலக கணக்குகளை இயக்கிக் கொள்ளலாம். இது கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.

> டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதனை முன்னெடுத்து, 75 மாவட்டங்களில் 75 வங்கி அலகுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

> நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 95% மாநில சராசரி மதிப்புகளையும் தாண்டி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. 2022-23-ல் இந்த திட்டம் மூலம் பின்தங்கிய பகுதிகள் மீது கவனம் செலுத்தும்.

> எல்லையோர கிராமங்களுக்கான துடிப்பான கிராமங்கள் திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சாலை இணைப்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்திற்கான ஆதரவு வழங்கப்படும்.

> நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும்.2023-ம் ஆண்டுக்குள் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க ஏதுவாக அமையும்.

> ஏவிஜிசி மூலம் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் ஆகியவை இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான மகத்தான திறனை வழங்குகிறது.

> ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.

> பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் 2022 முதல் வெளியிட ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படும். கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x