Published : 11 Apr 2016 09:40 AM
Last Updated : 11 Apr 2016 09:40 AM
விமான நிலையத்தில் இருந்து கிரேனில் தூக்கி செல்லப்பட்ட விமானம், சுற்றுச்சுவர் மீது விழுந்து நொறுங்கியது.
ஹைதராபாத் அருகில் உள்ள பேகம்பெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டி ருந்தது. அதை பயிற்சி அகாடமிக்கு மாற்ற கிரேன் மூலம் நேற்று காலை தூக்கி சென்றனர். அப்போது கிரேன் முறிந்து விழுந்ததில் தனி யாருக்குச் சொந்தமான கட்டிடத் தின் சுற்றுச்சுவர் மீது விமானம் விழுந் தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தது. விமானமும் பலத்த சேதம் அடைந் தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத் தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஏ-320 ஏர் இந்தியா விமானம் பயன்பாட்டில் இல்லாமல் விமான நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்தது. அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி 4 கி.மீ. தொலை வில் உள்ள ஏர் இந்தியா பயிற்சி அகாடமிக்கு மாற்ற முடிவெடுக்கப் பட்டது. அதன்படி 70 டன் எடை கொண்ட அந்த விமானத்தை காலை 7.00 மணிக்கு கிரேன் மூலம் தூக்கி சென்றனர். அப்போது கிரேன் முறிந்து விழுந்தது. இதில், சுற்றுச் சுவர் மீது விமானம் விழுந்து நொறுங்கி சேதம் அடைந்தது’’ என்றனர்.
70 டன் விமானத்தை தூக்கி செல்லும் வகையில் 200 டன் உள்ள கிரேன் ஏற்பாடு செய்துள்ளனர். எனினும், கிரேன் முறிந்ததால் பழைய விமான நிலைய சாலையில் பள்ளிக்கு அருகில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது விமானம் விழுந்துள்ளது.
விமான போக்குவரத்து புதிய விமான நிலையத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏர் இந்தியா விமானம் பேகம்பெட் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT