Published : 27 Jan 2022 01:49 PM
Last Updated : 27 Jan 2022 01:49 PM
புதுடெல்லி: டெல்லியில் கரோனா தொற்று கணிசமாக குறைந்து வருவதாகவும், இன்று 5,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தொற்று பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.
நாடுமுழுவதுமே கரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. டெல்லியிலும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. டெல்லியில் கோவிட் -19 சோதனை நேர்மறை விகிதம் கடந்த 10 நாட்களில் 20% குறைந்துள்ளது.
இதன் மூலம் டெல்லியில் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் -19 சோதனை நேர்மறை விகிதம் கடந்த 10 நாட்களில் 20% குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என முதல்வர் கேஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:
டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று நிலவரம் கட்டுக்குள் உள்ளது. டெல்லியில் நேற்று 7,498 புதிய கரோனா தொற்று எண்ணிக்கை பதிவானது. செவ்வாய்க்கிழமை 6,028 என பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் நேற்று 10.59 சதவீதமாக இருந்தது.
புதன்கிழமை நிலவரப்படி டெல்லியில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38,315 ஆக உள்ளது.
இன்று 5,000 க்கும் குறைவான நோய்த்தொற்று எண்ணிக்கை மட்டுமே பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நேர்மறை விகிதமும் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT