Published : 26 Jan 2022 08:03 AM
Last Updated : 26 Jan 2022 08:03 AM

அயோத்தியில் ராமர் கோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளதாக ராம் ஜென்மபூமி தீரத்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ராமர் கோயில் பீடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், கோயிலின் பிரதான கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன. முதல் மற்றும் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகளில், கோயிலின் அடித்தளம் மற்றும் தெப்பம் அமைக்கப்பட்டது. அநேகமாக ஜூன் மாதத்திற்குள் பீடம் அமைக்கும் பணிகள் முடிவடையும்" என்றார்.

3-ம் கட்டப் பணிகளை  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலர் சம்பத் ராய், நிர்வாகிகள் அனில் மிஸ்ரா, தீனேந்திர தாஸ் உள்ளிட்டோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். முன்னதாக யாகங்களும் நடைபெற்றன. கோயில் கட்டும் பணிகள் 2023-ம் ஆண்டில் நிறைவடைந்து பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x