Last Updated : 25 Jan, 2022 08:56 PM

3  

Published : 25 Jan 2022 08:56 PM
Last Updated : 25 Jan 2022 08:56 PM

பத்ம விருதுகள் அறிவிப்பு:  பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண்; தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு பத்ம பூஷண்

பிபின் ராவத்.

புதுடெல்லி: நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருதும், தடுப்பூசித் தயாரிப்பாளர்களான சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சிரஸ் பூனாவாலாவுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லாவுக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த பேராயுதமாக இருக்கும் நேரத்தில் இந்தியத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் இந்தியாவில் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.

சிரஸ் பூனாவாலா
கிருஷ்ணா மற்றும் சுசித்ரா எல்லா

சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சிரஸ் பூனாவாலாவுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷண் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

கலைத் துறையில் பிரபா ஆத்ரே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் உத்தரப் பிரதேசத்தின் ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்), சிவில் சர்வீஸ் துறையில் ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்), பொது சேவை பிரிவில் கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. குலாம் நபி ஆசாத்
2. விக்டர் பானர்ஜி
3. குர்மீத் பவா
4. புத்ததேவ் பாட்டச்சார்ஜி
5. நடராஜன் சந்திரசேகரன்
6. கிருஷ்ண எல்லா, சுசித்ரா எல்லா
7. மாதுர் ஜாஃப்ரி
8. தேவேந்திர ஜஜாரியா
9. ரஷீத் கான்
10. ராஜீவ் மெஹ்ரிஷி
11. சத்ய நாராயண நாதெல்லா
12. சுந்தரராஜன் பிச்சை
13. சிரஸ் பூனாவாலா
14. சஞ்சய ராஜாராம்
15. பிரதீபா ரே
16. சுவாமி சச்சிதானந்த்
17. வஷிஷ்ட் திரிபாதி

பத்ம ஸ்ரீ விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்:

1. பிரஹலாத் ராய் அகர்வால்
2. கமலினி ஆஸ்தனா மற்றும் நளினி ஆஸ்தனா
3. சோனு நிகாம்
4. சிற்பி பாலசுப்பிரமணியம்
5. மாதுரி பர்த்வால்
6. ஹர்மோஹிந்தர் சிங் பேடி
7. மரியா கிறிஸ்டோபர் ப்ரிஸ்கி
8. நீரஜ் சோப்ரா
9. சுலோச்சனா சாவல்
10. சைஃபல் அலி தார்
11. லதா தேசாய்

இவ்வாறாக பாடகர் சோனு நிகாம், ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 107 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x