Published : 24 Jan 2022 07:46 AM
Last Updated : 24 Jan 2022 07:46 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் அதிகாலை 2 மணியளவில் திறக்கப்பட்டது. மேலும், 22-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்தை பக்தர்கள் மேற்கொண்டனர். இந்த 10 நாட்களும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 10 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 79,000 பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய் துள்ளதாக தேவஸ்தானம் தெரி வித்துள்ளது.
இதுகுறித்து நேற்று மாலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கண்ட 10 நாட்களில், 6,949 எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் மீனவ பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் இலவசமாக சொர்க்க வாசல் தரிசனத்தை செய்வித்துள்ளது. மேலும், 26,420 பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், 1.66 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் பெற்றும், 83,000 பக்தர்கள் திருப்பதியில் உள்ளூர் டோக்கன் வழங்கியதாலும், 15,465 பக்தர்கள் வாணி அறக் கட்டளை மூலமாகவும், 43,250 பக்தர்கள் சேவா டிக்கெட் பெற்றதாலும், சொர்க்க வாசல் தரிசனம் செய்துள்ளனர். இந்த 10 நாட்களில் மட்டும் தேவஸ்தானம் உண்டியல் வாயிலாக பக்தர்கள் ரூ.21 கோடியே 61 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர். 15 லட்சத்து 14,000 லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு 500 வாரி சேவகர்கள், 1000 தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். 2.05 லட்சம் பக்தர்களின் லக்கேஜ்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன. பஸ்கள் தவிர, தனியாருக்கு சொந்தமான 69,117 கார், ஜீப் போன்ற வாகனங்கள் திருப்பதி-திருமலை இடையே இயங்கியுள்ளன. கடந்த 10 நாட் களில் மட்டும் 42,809 தங்கும் அறைகள் பக்தர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தேவஸ்தானத் திற்கு ரூ. 4.68 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கல்யாண கட்டாக்கள் மூலம் ஒரு லட்சத்து 24,000 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 4.58 லட்சம் பக்தர்களுக்கு தரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான சத்திரத்தில் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT