Published : 22 Jan 2022 06:33 PM
Last Updated : 22 Jan 2022 06:33 PM

மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு

புதுடெல்லி: அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். தங்கள் மாவட்டங்களின் செயல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தங்களின் அனுபவங்களை மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்து கொண்டனர். மாவட்டங்களில் வெற்றியைத் தருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பற்றியும், இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பிரதமர் நேரடியாக கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

தங்களின் முந்தைய பணிகளிலிருந்து முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் செயல்படுவது எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்த வெற்றியின் பின்னால் உள்ள முக்கிய காரணம், பொது மக்கள் பங்கேற்பு என்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தங்கள் குழுவின் ஊக்குவித்தலால் மக்கள் எவ்வாறு தினசரி பணியாற்றுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் பேசினர். அவர்கள் வேலை செய்யவில்லை, மாறாக சேவை செய்கிறார்கள் என்ற உணர்வாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது பற்றியும், புள்ளி விவரங்களால் இயக்கப்படும் நிர்வாகத்தின் பயன்கள் பற்றியும் அவர்கள் பேசினர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:

மற்றவர்களின் விருப்பங்கள் உங்களின் விருப்பங்களாக மாறும் போதும், மற்றவர்களின் கனவுகள் நிறைவேறுவது உங்கள் வெற்றியின் அளவுகோலாக மாறும் போதும் கடமையின் பாதை வரலாற்றை உருவாக்குகிறது. நாட்டில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் இந்த வரலாற்றை உருவாக்கியிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் கடந்த காலத்தில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பின்தங்கியிருப்பதற்கு வழிவகுத்து விட்டது. ஒட்டுமொத்த வளர்ச்சியை பெறுவதற்காக சிறந்த உதவி முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் தடைகளாக இருந்தவற்றை முன்னேற விரும்பும் மாவட்டங்கள் அகற்றி விட்டன.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் தடைகள் என்பதற்கு பதிலாக வேகத்தை அதிகப்படுத்துபவையாக மாறியிருக்கின்றன. முன்னேற விரும்பும் மாவட்டங்களின் இயக்கங்கள் காரணமாக விரிவாக்கமும், வடிவ மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. கூட்டாட்சி உணர்வு, மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாக கூட்டுப்பணி அடிப்படையிலான அரசியல் சட்டத்தின் கலாச்சாரம் ஆகியவற்றின் வலுவான வடிவத்தை இது வழங்கியிருக்கிறது.

முன்னேற விரும்பும் மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு நிர்வாகத்திற்கும், பொது மக்களுக்குமிடையே நேரடியான, உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். நிர்வாகத்தின் ஓட்டத்தில் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்பது ஒருவகையாகும்.

இந்த இயக்கத்தின் முக்கியமான அம்சம் தொழில்நுட்பமும். புதிய கண்டுபிடிப்பு. ஊட்டச்சத்து குறைபாடு, தூய்மையான குடிநீர், தடுப்பூசி போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பின் பயன்பாடு இந்த மாவட்டங்களில் சிறந்த பயன்களை தந்துள்ளது.

முன்னேற விரும்பும் மாவட்டங்களில் நாட்டின் வெற்றிக்கான முக்கிய காரணம் ஒருங்கிணைப்பு. அனைத்து ஆதாரங்களும் ஒன்றே, அரசு நிர்வாகம் ஒன்றே, அலுவலர்கள் ஒன்றே ஆனால் விளைவுகள் வேறுபட்டவை.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகள் 4-5 மடங்கு அதிகரித்திருக்கின்றன. எல்லா குடும்பத்திலும் ஒரு கழிப்பறை இருக்கிறது. அனைத்து கிராமத்தையும் மின்சாரம் சென்றடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் புதிய சக்தி ஊட்டப்பட்டுள்ளது.

சிரமமான வாழ்க்கை காரணமாக முன்னேற விரும்பும் மாவட்டங்களில் மக்கள் கடின உழைப்பாளிகளாக, துணிச்சல் உள்ளவர்களாக எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள முடிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த பலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டதால் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் சாதித்திருக்கின்றன. இந்த சீர்திருத்தம் ஏராளமான பயன்களை அளித்திருக்கின்றன. குறைபாடுகள் நீக்கப்பட்டதால் 1+1 என்பது 2 என்று ஆகாமல் 1+1 என்பது 11 ஆகியுள்ளது. இதுதான் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் கூட்டு சக்தியாகும். முதலில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை அடையாளம் காண கலந்தாலோசிக் கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அனுபவங்களின் அடிப்படையில் பணி செய்யும் முறை மேம்படுத்தப்படுவது, நிகழ்நேர கண்காணிப்பில் முன்னேற்றம், மாவட்டங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி, நல்ல நடைமுறைகளின் பிரதிபலிப்பை ஊக்கப்படுத்துவது.மூன்றாவதாக அதிகாரிகளின் பதவிக்காலம் நிலையாக இருப்பது, பயன்தரும் குழுக்கள் உருவாக்கத்தை ஊக்கப்படுத்துவது போன்ற சீர்திருத்தங்கள். குறைந்தபட்ச ஆதார வளங்கள் இருந்தாலும் கூட விளைவுகள் பெரிதாக இருப்பதற்கு இவை உதவி செய்தன. களப்பயணகள், ஆய்வுகள், முறையான அமலாக்கம் மற்றும் கண்காணிப்புக்காக இரவு நேர தங்கல்கள் ஆகியவற்றுக்கு விரிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இதுவரை சாதித்த சாதனைகளோடு ஒப்பிடும் போது மேலும் பெரிய அளவு சாதிப்பதற்கு நீண்ட தூரம் நாம் செல்லவேண்டியிருக்கிறது. இந்த மாவட்டங்களின் அனைத்து கிராமங்களுக்கும் சாலைகள், ஒவ்வொருவருக்கும் ஆயுஷ்மான் அட்டைகள், வங்கி கணக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, காப்பீடு, ஓய்வூதியம், ஒவ்வொருவருக்கும் வீட்டுவசதி ஆகியவற்றை கால வரம்பிற்கு உட்பட்ட இலக்குகளாக நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x