Published : 19 Jan 2022 09:57 AM
Last Updated : 19 Jan 2022 09:57 AM

இந்தியாவில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று: நேற்றைவிட 18% அதிகம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு தொற்று உறுதியானது. இது நேற்றைவிட 18% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. 8,961 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,82,970.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,79,01,241.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,88,157.

இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 15.13% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 441.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,847,202.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 158 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x