Published : 16 Jan 2022 04:08 PM
Last Updated : 16 Jan 2022 04:08 PM
லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில்அமைச்சராக இருந்து சமீபத்தில் விலகிய தராா சிங் சவுகான், சமாஜ்வாதிக் கட்சியில் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இன்று இணைந்தார்.
பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் ஏற்கெனவே இணைந்த நிலையில் தற்போது தாரா சிங் இணைந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜக எல்எல்ஏக்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா, பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர், அமைச்சர் தாரா சிங் சைனி, பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரும் சிகாஹோபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ முகேஷ் வர்மா பாஜக எம்எல்ஏ வினய் சாக்யாவும் அந்த கட்சியிலிருந்து இதுவரை விலகியுள்ளார்.
இந்நிலையில் பாஜக அ ரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் கடந்தவெள்ளிக்கிழமை அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இவர்கள் தவிர்த்து எம்எல்ஏக்களாக இருக்கும் பகவதி சாஹர், வினய் சாக்யா, ரோஷன் லால்வர்மா, முகேஷ் வர்மா, பிரஜேஷ் குமார் பிரஜாபதி ஆகியோரும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியி்ல் இணைந்தனர்.
அப்னாதளம் எம்எல்ஏ சவுத்ரி அமர் சிங், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்எல்ஏ நீரஜ் குஷ்வாலா மவுரியா, பாஜக முன்னாள் எம்எல்சி ஹர்பால் சைனி, பகுஜன் சமாஜ் முன்னாள் எம்எல்ஏ பல்ராம் சைனி, பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர பிரதாப் சிங், முன்னாள் அமைச்சர் வித்ரோஹி மவுரியா, முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாதம் சிங், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பான்சி சிங் ஆகியோரும் சமாஜ்வாதியில் இணைந்தனர்.
இந்நிலையில் மதுபானி தொகுதி எம்எல்ஏவான தார சிங் சவுகான், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இன்று இணைந்தார்.அப்போது தாரா சிங் கூறுகையில் “கடந்த 2017ம் ஆண்டுபாஜக ஆட்சியில் அமர்ந்தபோது, அனைவருக்குமான அ ரசு, அனைவரையும் அடக்கிய அரசு என்று கூறி அனைவரிடமும் ஆதரவு கோரியது. ஆட்சிக்கு வந்தபின் சிலர் மட்டுமே மேம்பட்டு, வளர்ச்சி அடைந்துள்ளார்கள். பிற்படுத்தப்பட்டோர் மட்டுமின்றி, தலித்துகள், பிராமணர்களும் பாஜக ஆட்சியின் மீது அதிருப்தியுடன் உள்ளனர் ” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT