Published : 14 Jan 2022 07:34 PM
Last Updated : 14 Jan 2022 07:34 PM
திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரஜோதி தோன்றியதை அடுத்து மலைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலையின் பொன்னம்பல மேட்டில் தோற்றும் மகரஜோதியை தரிசித்தால் செல்வங்கள்சேரும், பாவங்கள் தொலையும் என்பது ஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை. இதனால் கரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுவந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிகஅளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது. அதன்காரணமாக சபரிமலையில் இந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சபரி மலை சன்னிதானம் மட்டுமின்றி, பம்பா, நீலிமலை உள்ளிட்டஅனைத்து மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.
இன்று சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்கத்தினால் ஆன திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பந்தள ராஜகுமாரணாக அரசக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை சற்றுமுன் தீபாராதனை தொடங்கியது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது வானில் மகர நட்சத்திரமாக ஐயப்பன் தோன்றியதாக ஐதீகம். அதேநேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பிரகாசமாக தோன்றியது. அது ஐயப்பனின் ஜோதிவடிவம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஜோதியின்போது, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களால் விண்ணை முட்டியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT