Published : 14 Jan 2022 12:23 PM
Last Updated : 14 Jan 2022 12:23 PM

 திமுகவின் 53 சதவீத வருமானம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கிடைத்தன: அறிக்கையில் தகவல்

தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் | கோப்புப்படம்


புதுடெல்லி: தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவின் 2020-21ம் ஆண்டு வருமானத்தின் 53 சதவீதம் அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களால் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக வந்துள்ளன.

திமுக கட்சியின் 2020-21ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணஐயம் தனது இணையதளத்தில் வெளியி்ட்டுள்ளது. அதில் திமுகவுக்கு 2020-21ம் ஆண்டில் ரூ.149.95 கோடி வருமானம் வந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.64.90 கோடி வருவாய் கிடைத்திருந்தது.

ஒட்டுமொத்த வருமானத்தில் ரூ.113.99 கோடி, மானியங்கள், நன்கொடைகள், பங்களிப்புகள் மூலம் கிடைத்தன என்று ஆண்டு தணிக்கை அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ளது. ரூ.80கோடி தேர்தல்நிதிப் பத்திரங்கள் வாயிலாக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் ரூ.45.50 கோடி கிடைத்தன.

ரூ.11.74 கோடி உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாகவும், ரூ.16.54 கோடி தேர்தல் செலவாகவும் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ரூ.218.49 கோடி செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது, இதில் ரூ.213.27 கோடி தேர்தல் செலவாகும் ரூ.69 கோடி பிரச்சாரத்துக்காகவும், ரூ.56.69 கோடி நாளேடுகள், தொலைக்காட்சி, மின்னணு விளம்பரங்களுக்கும் செலவி்ட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஇஅதிமுக 2020-21ம் ஆண்டில் ரூ.42.36 கோடி செலவிட்டதாகவும், இதில் ரூ.34.86 கோடி தேர்தல் செலவு எனத் தெரிவித்துள்ளது. அஇஅதிமுகவுக்கு கடந்த ஆண்டில், ரூ.34.07 கோடி வருமானம் வந்துள்ளதாகவும், ரூ.16..68 கோடி இதர மூலங்கள் மூலம் வருவாய்வந்துள்ளன. ரூ.12.28 கோடி உறுப்பினர் சேர்க்கை, விண்ணப்ப வினியோகம் மூலமும், ரூ.2 கோடி மானியங்கள், நன்கொடைகள், பங்களிப்புகள் மூலம் கிடைத்தன எனத் தெரிவித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் அஇஅதிமுகவுக்கு ரூ.58.24 கோடி வருமானம், மானியங்கள், நன்கொடைகள், உதவிகள் மூலம் கிடைத்தன. 2020-21்ஆண்டில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி கிடைத்தது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை,அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.6 கோடி மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x