Published : 11 Jan 2022 09:44 AM
Last Updated : 11 Jan 2022 09:44 AM
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு தொற்று உறுதியானது. இது நேற்றைவிட 6.4% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று 4,461 என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,68,063.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,58,75,790.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 69,959.
இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 10.74% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 277.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,84,213.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 8,21,446.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 152 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT