Published : 09 Jan 2022 09:02 AM
Last Updated : 09 Jan 2022 09:02 AM
புதுடெல்லி: 60வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ மற்றும் சுகாதாரப் முன்களப்பணிாயளர்கள், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கான பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான பதிவு கோவின் தளத்தில் தொடங்கியது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார்.
பிரதமர் மோடி அறிவிப்பின், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 2 கோடி பேர் வரை தடுப்பூசி செலுத்திவிட்டனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நாளை நாடுமுழுவதும் தொடங்க உள்ளது. இதற்கான பதிவு செய்தல் கோவின் தளத்தில் நேற்று முதலே தொடங்கிவிட்டது.
இந்தியாவில் 60வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வருவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் செயலர் விகாஸ் ஷீல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கோவின் தளத்தில் 60வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிக்கு பதிவிடலாம். எந்தவிதான புதிய பதிவும்தேவையில்லை. ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒருமுறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது.
60வயதுக்கு ேமற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியிருந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது, மருத்துவரிடம் எந்த சான்றிதழும் பெற்று கொண்டு செல்லத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT