Published : 05 Jan 2022 08:33 AM
Last Updated : 05 Jan 2022 08:33 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தக் ஷின கன்னடா மாவட்டம் உல்லால் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ இதனப்பாவின் பேரனுக்கு ஐஎஸ் தீவிர அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் இதனப்பாவின் பேரன் அனஸ் அப்துல் ரஹ்மான் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட லேப்டாப், பென் டிரைவ் ஆகியவற்றை ஆராய்ந்ததில் அவரும், அவரது சகோதரர் முகமது அம்மாரும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மீண்டும் ரஹ்மானின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது மனைவி மரியம் (எ) தீப்தி மர்லாவின் கணிணி, செல்போன், சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, அவரையும் கைது செய்த அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT