Published : 03 Jan 2022 11:53 AM
Last Updated : 03 Jan 2022 11:53 AM

’பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசினார்’: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு

ஹரியானா: விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது: நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன். அதற்கு அவர் மிகை மிஞ்சிய ஆணவத்துடன் "அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?" என்று கேட்டார்.

நான் அவரிடம் "ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்" என்று கூறினேன். அவர் உடனே நீங்கள் அமித் ஷாவைப் பாருங்கள் என்றார். நானும் அமித் ஷாவைப் பார்த்தேன்.

அமித் ஷாவோ, "ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார்" என்று கூறினார்.

அவர்களின் பேச்சு குறித்து இவ்வாறாக சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.

கையிலெடுத்த காங்கிரஸ்: அவருடையை பேச்சை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த ஒரு பேட்டி போது பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கைக் காட்ட என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

அதில், மேற்கூறிய வார்த்தைகளைப் பதிவிட்டு, இது ஜனநாயக நாடு கவனிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறியுள்ளது.

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர் கோவா மாநில ஆளுநாரானர். தற்போது அவர் மேகாலயா மாநில ஆளுநராக உள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய கருத்துகளுக்காக பணியிட மாறுதல்கள் நிகழும் என்றால் அதற்காக நான் சிறிதும் அஞ்சப்போவதில்லை என்று சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x