Published : 02 Jan 2022 07:56 AM
Last Updated : 02 Jan 2022 07:56 AM
மும்பை :முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.
அதேபோல டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர்(முஸ்லிம்) தன்னுடைய புைகப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார்.
முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒவைசி எம்.பி. காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலியில் மூலம் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம்பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. சல்லிடீல்,புல்லிபாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு டீல் ஆஃப்தி டே என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்து, அந்த செயலி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மும்பை போலீஸ் ஆணையர், டிசிபி குற்றவியல் ராஷ்மி கரன்திகர் ஆகியோரிடம் முஸ்லிம்பெண்களை ஏலம் விடும் செயலி குறித்துப் பேசினேன். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மகாராஷ்டிரா காவல் டிஜிபியும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். இந்த பாலியல் மற்றும் பெண் வெறுப்பு இணையத்தை நடத்துவோர் கைது செய்யப்பட வேண்டும்.
மரியாதைக்குரிய தகவல்தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற தளத்தின் மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை அவதூறு செய்யும் தளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தபுகார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நெட்டிஸன் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ சல்லி டீல், புல்லி பாய் ஆகிய தளங்களில் தொடர்ந்து இதுபோன்று முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டுவருவதைக் காணலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு டெல்லியிலும், உ.பி.யிலும் நடந்து முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது ஆனால், பெரிதாக நடவடிக்கை ஏதுமில்லை.
இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து டெல்லி சிஆர் பார்க் போலீஸில் புகார் செய்துள்ளார்.
அந்த பத்திரிகையாளர் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ என்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் முயற்சி. புல்லிவாய் எனும் இணையதளத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் புகைப்படங்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது ஏற்க முடியாது என்னை மட்டுமல்ல பல பெண்களையும் இதுபோன்று சித்தரித்துள்ளனர்.இந்த இணையதளமே முஸ்லி்ம் பெண்களை அவதூறு செய்யும்நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக டெல்லி சிஆர் பார்க் போலீஸில் புகார் செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. அசாசுதீன் ஒவைசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வது வேதனையாக இருக்கிறது. அதிகாரிகள் கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.அஸ்வின்வைஷ்ணவ், டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் விதத்தில் இருப்பது ஆபத்தான போக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான போக்கு.ஏற்கெனவே இதுபோன்று நடந்து நடவடிக்கை இல்லை, இதனால்துணிச்சலாக மீண்டும் நடக்கின்றன. இதை ஆளும் அரசும் ஆதரிக்கிறது” எனக்கண்டித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT