Published : 02 Jan 2022 07:08 AM
Last Updated : 02 Jan 2022 07:08 AM
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு, மகன் பிரவீண் மற்றும் குடும்பத்தினருடன் காக்கிநாடா கடற்கரைக்கு சென்றார். அங்கு வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுள்ளார்.
அப்போது சிறுவன் பிரவீண், அவரிடம் ரூ.25-க்கு வேர்க்கடலை வாங்கினார். ஆனால், பிரவீணின் தந்தை மோகனிடம் பணம் இல்லை. வேர்க்கடலை பொட்டலங்களை திருப்பி அளித்தபோது, 'நாளைக்கு பணம் கொடுங்கள்' என்று கூறி உள்ளார் வேதசத்தையா. அடுத்த நாள் மோகனும் பிரவீணும் கடற்கரைக்கு சென்றபோது வேதசத்தைய்யாவை காணவில்லை.
அதன்பின் மோகன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். விடுமுறைக்கு காக்கிநாடா வந்தபோது, கடற்கரைக்கு சென்று வேதசத்தைய்யாவை தேடினார்.
இதுகுறித்து தனது உறவினரும் காக்கிநாடாவின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரிடம், எடுத்துக் கூறி அப்போது வேதசத்தையாவுடன் பிரவீண் எடுத்தபுகைப்படத்தையும் அனுப்பினார்.அந்தப் படத்தை அவரது உதவியாளர் சமூக வலைதளத்தில் முழுவிவரங்களுடன் பதிவிட்டார்.
இதைப் பார்த்த சிலர், வேதசத்தைய்யா இறந்துவிட்டார் என்றுதகவல் தெரிவித்தனர். அதன்பின், அவரது மனைவியை எம்எல்ஏ வீட்டுக்கு வரவழைத்து, பிரவீண் வேர்க்கடலை கடனை திருப்பி செலுத்தினார். 12 ஆண்டுக்கு முன்பு பெற்ற 25 ரூபாய் கடனுக்கு, வட்டியுடன் சேர்த்து ரூ.25 ஆயிரத்தை அவர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT