Published : 01 Jan 2022 11:47 AM
Last Updated : 01 Jan 2022 11:47 AM

6 பில்லியன் பார்வையாளர்கள்: 2021-ம் ஆண்டில் தூர்தர்ஷன் சாதனை

புதுடெல்லி: 2021-ம் ஆண்டில் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளும் மொத்தமாக நாடு முழுவதும் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காலையும் மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீத்தில் 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றது.
ராமாயணம் மட்டுமல்லாமல் மகாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களையும் மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர்.

இதனால் தூர்தர்ஷன் நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறியது. தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் 2021-ம ஆண்டும் தூ்தர்ஷன் பெரும் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் கடந்த இரு வருடங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிபரப்பு சீர்திருத்தங்கள், அனலாக் டெரஸ்ட்ரியல் டிவி டிரான்ஸ்மிட்டர்கள் போன்ற பழைய ஒளிபரப்பு தொழில்நுட்பங்களை, படிப்படியாக மாற்றி வருவதால், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளின் வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது.

அதோடு, யூடியூப் போன்ற டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இதன் செயல்பாடுகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில் பிரசார் பாரதியின் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவை நாடெங்கிலும் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் வெளியிட்டு நேயர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

2021-ம் ஆண்டில் தூர்தர்ஷனின் அலைவரிசைகள் நாடு முழுவதும் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 2021-ம் ஆண்டில் தூர்தர்ஷன் அலைவரிசைகள் 680 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியின் யூடியூப் சேனல்கள் 2021-ல் 1 பில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த 94 மில்லியன் மணி நேரம் இவை பார்க்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷனில் கோவிட்-19 தொடர்பான சமூக தகவல்கள் 95 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது. பல்வேறு மொழிகளில் செய்திகளை 356 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கோவிட் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் 43 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x