Last Updated : 30 Dec, 2021 10:46 AM

1  

Published : 30 Dec 2021 10:46 AM
Last Updated : 30 Dec 2021 10:46 AM

ராகுல் வெளிநாட்டுப் பயணங்களை வைத்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டிப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களை வைத்து வதந்திகளைப் பரப்பி அரசியல் செய்ய வேண்டாம் என பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா அளித்தப் பேட்டியில், ராகுல் காந்தி குறுகிய வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம். இது குறித்து பாஜகவும், ஊடக நண்பர்களும் வதந்திகளை தேவையில்லாமல் பரப்பாமல் இருக்க வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார். ராகுல் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே அவர் 2022 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இத்தாலி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையொட்டியே ரன்தீப் சூரஜ்வாலா வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

— ANI (@ANI) December 29, 2021

ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள்:

வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடந்த மாதம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அவர் வெளிநாடு சென்று திரும்பினார். அவர் லண்டன் சென்று திரும்பிய சிறிது காலமே ஆன நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். இந்த முறை அவர் இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்தது. அதன் பின்னர் ராகுல் காந்தி 55 நாட்கள் வெளிநாட்டிலேயே இருந்தார். அவரது நீண்ட வெளிநாட்டுப் பயணம் அப்போது பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. அதன்பின்னர் 2019 அக்டோபரில் ராகுல் காந்தி பாங்காக் சென்றார். மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றது அப்போது சர்ச்சையானது.
இப்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நிச்சயமாக நடத்தப்படும் என்றும் அதில் ராகுல் காந்தி தலைவராகத் தேர்வாவது உறுதி என்றும் கட்சி வட்டாரங்கள் உறுதிபடக் கூறும் சூழலில் ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x