Published : 30 Dec 2021 09:40 AM
Last Updated : 30 Dec 2021 09:40 AM

பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது: உ.பி. எம்.பி. பேச்சு

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயில் புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கனோஜ் தொகுதி எம்.பி. பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) கனோஜ் தொகுதி எம்.பி. சுப்ரத் பதக் பேசியதாவது: நலத்திட்டங்களை நிறைவேற்றும் போது பாஜக ஒருபோதும் யாருடைய மதத்தையும் அறிந்து செய்ததில்லை. யாருடைய சாதியையும் கேட்டதில்லை. 100 வீடுகள் ஒதுக்கப்பட்டால் அதில் 30 முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். வளர்ச்சிப் பணிகளில் பாரபட்சம் காட்டாவிட்டாலும் கூட பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, அயோத்தியில் கோயில் கட்டியது, காசியில் கோயில் புனரமைத்தது, மதுராவில் கோயில் கட்டவுள்ளது போன்ற காரணங்களுக்காக பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதேபோல், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள், ஷாரியா சட்டத்திற்காக கனவு காண்பவர்களின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x