Published : 29 Dec 2021 06:12 PM
Last Updated : 29 Dec 2021 06:12 PM

‘‘கடந்த வாரம் 150, தற்போது 2000’’- மும்பையில்  தினசரி அதிகரிக்கும் கரோனா தொற்று: ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை

மும்பை: மும்பையில் கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 150 கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகிய நிலையில் தற்போது 2,000 என்ற எண்ணத்தை தொடும் சூழல் உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் பல மாநிலங்களில், 781 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெல்லி 238 என்ற எண்ணிக்கையில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 167 , குஜராத்தில் 73 , கேரளா 65 என்ற எண்ணிக்கையிலும் ஒமைக்ரான் தொற்று உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

அடுத்து புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

மும்பையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல், மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மற்றும் மூத்த சுகாதார அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஒமைக்ரான் மட்டுமல்லாமல் கரோனா தொற்று எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,333 கோவிட்-19 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. ஒமைக்ரான் அதிக எண்ணிக்கையில் பதிவாகும் முதல் இரண்டு நகரங்களில் மும்பை மற்றும் டெல்லியும் உள்ளன.


இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே இதுகுறித்து கூறியதாவது:

‘‘மும்பையில் கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 150 தொற்று எண்ணிக்கை பதிவாகியது. இப்போது, தினமும் சுமார் 2,000 எண்ணிக்கையில் தொற்று பதிவாகின்றது. மும்பை இன்று ஒரு நாளைக்கு 2,000 வழக்குகளைத் தாண்டக்கூடும் ”என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x