Published : 29 Dec 2021 06:19 AM
Last Updated : 29 Dec 2021 06:19 AM
பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் (எ)ஸ்ரீகி (26) பள்ளியில் படிக்கும்போதே ஹேக்கிங் தொழில்நுட்பத்தின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார் பிட்ஃபினிக்ஸ் க்ரிப்டோகரன்சி சந்தையை ஹேக் செய்து 2016-ல் 1 லட்சத்து 19,756 பிட்காயின்களை திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு ‘டார்க்நெட்’ எனப்படும் இணைய வெளியில் போதைப் பொருள் விற்பனையிலும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதே ஆண்டில் கர்நாடக அரசின் ‘சென்டர் ஃபார்எக்ஸலென்ஸ்’ இணைய கொள்முதல் இணையதளம் ஹேக்செய்யப்பட்டு, ஏலம் கோருபவர்களின் எர்னஸ்ட் மணி டெபாசிட் (இஎம்டி) தொகை ரூ.11.5 கோடிஹேக் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை, உ.பி.யைச் சேர்ந்த புலந்த்சரில் நிம்மி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உட்பட 14 கணக்குகளில் வரவு வைத்ததை கண்டுபிடித்தது.
கர்நாடக குற்றப் புலனாய்வுபிரிவு போலீஸார் இவ்வழக்கில்தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கைவிவரம் வெளியானது. அதில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் பெங்களூருவில் உள்ள கோகுலம் கிராண்ட் நட்சத்திர விடுதியின் கணிணி இணைய இணைப்பு பயன்படுத்தி கர்நாடகஅரசின் ‘சென்டர் ஃபார் எக்ஸலென்ஸ்’ இணைய கொள்முதல் இணையத் தளத்தை ஹேக் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT