Last Updated : 28 Dec, 2021 02:57 PM

1  

Published : 28 Dec 2021 02:57 PM
Last Updated : 28 Dec 2021 02:57 PM

முதன்முதலில் டி20 கிரிக்கெட் ஆடிய முதல் இந்திய முன்னாள் வீரர் பாஜகவில் இணைந்தார்

பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ பதே பஜ்வா பாஜகவில் அமைச்சர் ஷெகாவத் முன்னிலையில் இணைந்த காட்சி |படம் ஏஎன்ஐ


புதுடெல்லி : இந்தியாவிலேயே முதன் முதலில் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான தினேஷ் மோங்கியா பாஜவில் இன்று இணைந்தார். இவருடன் சேர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ பதே சிங் பஜ்வாவும் பாஜவில் சேர்ந்தார்

இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தவர் தினேஷ் மோங்கியா என்பது குறிப்பிடத்தக்கது. இடதுகை பேட்ஸ்மேனான தினேஷ் மோங்கியா நடுவரிசையில் களமிறங்கி விளையாடக்கூடியவர்.

இதுவரை இந்திய அணிக்காக 57 போட்டிகளில் விளையாடிய தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகப்டசமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் குவஹாட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்களை மோங்கியா அடித்திருந்தார்.

தினேஷ்மோங்கியா பாஜகவில் இணைந்தகாட்சி

வெளிநாடுகளில் சென்று தினேஷ் மோங்கியா சிறப்பாகச் செயல்படவில்லை என விமர்சனம் எழுந்தது, இதையடுத்து, அணியிலிருந்து படிப்படியாக தினேஷ் மோங்கியா ஓரங்கட்டப்பட்டார்.

பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்திராத செய்தி என்னவெனில், சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் தினேஷ் மோங்கியாதான். 2004-ம் ஆண்டு லண்டனில் லங்காஷையர் அணிக்காக தினேஷ் மோங்கியா களமிறங்கினார். இந்த பெருமை இன்றளவும் தினேஷ் மோங்கியாவுக்கு உண்டு. இந்திய அணியிலிருந்து ஒதுங்கியபின் இங்கிலாந்தில் கவுண்டி அணிகளான லங்காஷையர், லீசெஷ்டர்ஷையர் ஆகியஅணிகளுக்காக ஆடினார்.

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஒருநாள் ஆட்டத்தில் மோங்கியா இந்திய அணியில் அறிமுகமாகி, தனது 5-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதத்தை அடித்தார்.

நடுவரிசையில் தினேஷ் மோங்கியா சிறப்பாகச் செயல்பட்டார், குறிப்பாக தேவைப்படும்போது அடித்து ஆடக்கூடியவர், விக்கெட் சரிவின்போது நிதானாகவும் பேட் செய்யக்கூடியவர் என்பதால், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மோங்கியாவுக்கு இடம் கிடைத்தது. அணியில் மோங்கியா இடம் பெற்றதால், விவிஎஸ் லட்சுமணுக்கு இடம் மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் மோங்கியா, காங்கிரஸ் எம்எல்ஏ பதே சிங் பஜ்வா இருவரும் இன்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வாவின் சகோதரர், குவாதியன் தொகுதி எம்எல்ஏ பதே சிங் பஜ்வா. இவர்கள் தவிர பல்விந்தர்சிங் லட்டி எம்எல்ஏவும் பாஜகவில் இன்று இணைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x