Published : 27 Dec 2021 10:12 AM
Last Updated : 27 Dec 2021 10:12 AM

15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மட்டும்தான் தடுப்பூசி

கோப்புப்படம்


புதுடெல்லி:15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குச் செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மட்டும்தான் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயதுவந்தோருக்குச் செலுத்த கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக், மார்டனா, ஃபைஸர் ஆகியதடுப்பூசிகள் இருந்தாலும், 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு இந்தியாவில் செலுத்த கோவாக்சின் மட்டும்தான் தடுப்பூசியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2022, ஜனவரி 3ம்தேதி முதல் 15 வயதுமுதல் 18வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10ம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை இரவு ெவளியிட்டார். ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, குழந்தைகள், முதியோர், இணைநோய்கள் இருப்போர், முன்களப்பணிாயளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை டோஸ்(பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதியளித்தாலும், இன்னும் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை. கெடிலா நிறுவனத்தின் தடுப்பூசி மூலம் 12 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இந்த நிறுவனத்தின் ஜைவோக்டி தடுப்பூசி டிஎன்ஏ வகை தடுப்பூசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 15 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்குச் செலுத்த கோவாக்சின் மட்டும்தான் இருக்கும்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ குழந்தைகளில் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்சின் மட்டும்தான் இருக்கிறது. ஜைடஸ் கெடிலா நிறுவனம் இன்னும் தனது தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை.

ஜனவரி 3ம் தேதி இந்த பிரிவினருக்கு தடுப்பூசி போடும்தி்ட்டம் தொடங்கப்படுகிறது, ஏறக்குறைய 7 முதல் 8 கோடி பேருக்கு செலுத்தப்படலாம். கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்குமேற்பட்டோருக்கு செலுத்தலாம் என டிசிஜிஐ கடந்த வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x