Published : 13 Mar 2016 11:48 AM
Last Updated : 13 Mar 2016 11:48 AM
தெலுங்கு திரைப்பட உலகில் நகைச்சுவை படங்களில் கதா நாயகனாக நடித்து புகழ் பெற்ற வர் ‘அல்லரி’ நரேஷ். திரைப்பட தயாரிப்பாளர் சத்யநாராயணா வின் மகனான இவர் முதலில் ‘அல்லரி’ என்ற படத்தில் அறிமுக மானதால் ‘அல்லரி’ நரேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் ‘குறும்பு’, ‘போராளி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில், கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுடன் எடுத்து கொண்ட செல்பீ புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கீழ், “பல வங்கிகளால் தேடப்படும் விஜய் மல்லையா வுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம். இது தான் அவர் இந்தியாவில் எடுத்துக் கொண்ட கடைசி செல்பீ. இதை நான் ரசிக்கிறேன்” என குறிப்பிட்டுள் ளார். விஜய் மல்லையா வெளி நாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பு இந்தியாவில் கடைசியாக நரேஷுடன் இந்த செல்பியை எடுத்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கிங்பிஷர் விமான நிறுவன உரிமையாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற சுமார் 9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனுக்கு தப்பிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT