Published : 26 Dec 2021 11:46 AM
Last Updated : 26 Dec 2021 11:46 AM
காந்தவா:மத்தியப்பிரதேசத்தில் காந்தவா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம்வகுப்பு பொது அறிவு கேள்வித்தாளில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், சைப் அலிகான் மகனின் முழுப்பெயர் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச கல்வித்துறையைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் நெட்டிஸன்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
காந்தவா நகரில் உள்ள அகாடெமிக் ஹைட்ஸ் என்ற பள்ளியில், 6-ம்வகுப்புக்கான தேர்வு நடந்தது. இதில் பொது அறிவு வினாத் தாளில் கரீனா கபூர், சைப் அலிகானின் மகனின் முழுப் பெயரை எழுதுக என்ன என்று கேட்கப்பட்டிருந்தது.
இந்த கேள்வித்தாளின் நகல் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து வைரலானது. மத்தியப்பிரதேச கல்வித்துறை கடும் விமர்சனத்துக்கும், ேகள்விக்குள்ளானது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், நெட்டிஸன்கள், கடும் கண்டனத்தையும், கேள்வி எடுக்கப்பட்ட விதத்தையும் விமர்சித்தனர்.
காந்தவா மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சீவ் பால்ராவ் கூறுகையில் “ என்னுடைய கவனத்துக்கு இந்த விவகாரம் வந்ததது. உடனடியாக அந்தப் பள்ளிக் கூடத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறேன். பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்
பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகி அனீஸ் அர்ஜாரே கூறுகையில் “ மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி, அஹில்யாபாய் ஹோல்கர், மகாத்மா காந்தி, நேரு உள்ளி்ட்ட பல்வேறு சிறந்த தலைவர்களைப் பற்றி கேள்வி கேட்கலாம். ஆனால், இதுபோன்று ேகள்விகளைக் கேட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பள்ளிநிர்வாக இயக்குநர் ஸ்வேதா ஜெயின் கூறுகையில் “ மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவே இதுபோன்ற கேள்வி கேட்கப்படுகிறது. கேள்வித்தாளை டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு தயார் செய்துஅளித்தது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் இந்த கேள்வித்தாளை எதிர்க்கவில்லை.
எந்த மாணவரின் பெற்றோரும் அதிகாரிகளிடம் புகாரும் அளிக்கவில்லை. எந்த மதத்தோடும், சமூகத்தோடும் இணைத்து கேள்வி கேட்டிருந்தால் அது தவறு. இது மாணவர்க்ளின் அறிவை வளர்க்கும் விதத்தில்தான் கேள்வி கேட்கப்பட்டிருந்தது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT